செப்பம் · ஒளியோன் ஆய்வகம்
பயன்பாட்டு விதிமுறைகள்
நடைமுறைக்கு வந்த நாள்: 24 அக்டோபர் 2026
செப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்காணும் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள். இவை எளிமையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
செப்பம் என்ன தருகிறது
செப்பம் தமிழ் உரையில் எழுத்து, சந்தி, இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டி மாற்றுகளைப் பரிந்துரைக்கும் இலவசக் கருவி. அது ஒரு துணை மட்டுமே; அதன் பரிந்துரைகள் எப்போதும் சரியாக இருக்கும் என்று உறுதியளிக்க முடியாது. ஏற்பதா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்கிறீர்கள்; உங்கள் உரைக்கு நீங்களே பொறுப்பு. தேர்வு, சட்டம், மருத்துவம் போன்ற முக்கியமான ஆவணங்களுக்கு, அறிந்தவர் ஒருவரைக் கொண்டு மீண்டும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இலவசம்
செப்பம் இலவசம்; விளம்பரம் இல்லை. வசதிகளைச் சேர்க்கவோ மாற்றவோ நிறுத்தவோ எங்களுக்கு உரிமை உண்டு; பெரிய மாற்றம் என்றால் தளத்தில் முன்கூட்டியே தெரிவிப்போம்.
உங்கள் கணக்கு
- ஒருவருக்கு ஒரு கணக்கு. உங்கள் மின்னஞ்சலைப் பாதுகாப்பாக வைத்திருங்கள் — உள்நுழைவுக் குறியீடுகள் அங்குதான் வரும்.
- தவறான பயன்பாடு இருந்தால் கணக்கை இடைநிறுத்தலாம்.
- எப்போது வேண்டுமானாலும் கணக்குப் பக்கத்தில் உங்கள் கணக்கை நீக்கலாம்.
முறையான பயன்பாடு
- தானியங்கி நிரல்கள் மூலம் பெருமளவில் கோரிக்கைகள் அனுப்புவது, சொல் பட்டியலை மொத்தமாகப் பிரித்தெடுப்பது, தளத்தைச் சீர்குலைக்க முயல்வது கூடாது.
- பரிந்துரைகளில் சட்டத்துக்குப் புறம்பான, புண்படுத்தும், பிறரின் தனிப்பட்ட விவரங்களைக் கொண்ட உள்ளடக்கம் கூடாது.
உங்கள் உள்ளடக்கம்
நீங்கள் எழுதுவது உங்களுடையது; அதை நாங்கள் சேமிப்பதில்லை. நீங்கள் பரிந்துரைக்கும் சொற்களை, எல்லோருக்குமான செப்பம் சொல் பட்டியலில் சேர்த்துப் பயன்படுத்த ஒளியோன் ஆய்வகத்துக்கு அனுமதி அளிக்கிறீர்கள்.
சொல் பட்டியலின் ஆதாரங்கள்
- கணியம் அறக்கட்டளையின் ‘all_tamil_words’ சொல் எண்ணிக்கைகள் — பொதுக் களம் (Public Domain).
- Hermit Dave தொகுத்த OpenSubtitles 2018 தமிழ்ச் சொல் எண்ணிக்கைகள் — CC BY-SA 4.0.
- Open-Tamil திட்டத்தின் சொல் பட்டியல்கள் (தமிழ் இணையக் கல்விக் கழக அகராதித் தலைச்சொற்கள் உட்பட) — MIT.
- AI4Bharat Sangraha தமிழ்த் தொகுப்பிலிருந்து கணக்கிட்ட சொற்கள், அடுத்தடுத்து வரும் சொற்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைகள் — CC BY 4.0.
இவற்றை உருவாக்கியவர்களுக்கு எங்கள் நன்றி.
பொறுப்பு வரம்பு
செப்பம் ‘உள்ளது உள்ளபடி’ வழங்கப்படுகிறது. சட்டம் அனுமதிக்கும் அளவுக்கு, அதன் பரிந்துரைகளை நம்பியதால் ஏற்படும் இழப்புக்கு ஒளியோன் ஆய்வகம் பொறுப்பேற்காது.
சட்டமும் தொடர்பும்
இந்த விதிமுறைகள் இந்தியச் சட்டத்துக்கு உட்பட்டவை; சென்னை நீதிமன்றங்களுக்கே அதிகார வரம்பு. கேள்விகளுக்கு connect@oliyon.in முகவரிக்கு எழுதுங்கள்.
