உலாவி நீட்டிப்பு

எந்தத் தளத்திலும் செப்பம்

Gmail, WhatsApp Web, Facebook, உங்கள் வலைப்பதிவு — எங்கே தமிழில் எழுதினாலும், அங்கேயே செப்பத்தால் சரிபார்க்கலாம். Chrome, Edge, Brave போன்ற உலாவிகளுக்கான இலவச நீட்டிப்பு.

இலவசம் — எல்லோருக்கும், என்றும்.

Chrome Web Store-இல் வெளியானதும் ஒரே சொடுக்கில் நிறுவலாம்; அதுவரை கீழே உள்ளபடி நிறுவுங்கள் (இரண்டு நிமிடம்).

கருவிப்பட்டைச் சாளரம்
கருவிப்பட்டைச் சாளரம்

என்ன செய்யும்

  • வலது சொடுக்கு

    தமிழ் உரையைத் தேர்ந்தெடுத்து, வலது சொடுக்கில் ‘செப்பம் சரிபார்க்க · Check with Seppam’ என்பதைத் தேர்வு செய்யுங்கள். பிழைகளும் பரிந்துரைகளும் அதே பக்கத்தில் தெரியும்.

  • எழுதும் பெட்டியிலேயே திருத்தம்

    எழுதும் பெட்டியில் ஒருமுறை தொட்டுவிட்டு, கருவிப்பட்டையில் செப்பம் → ‘இந்தப் பக்கத்தில் எழுதும் பெட்டியைச் சரிபாருங்கள்’. பரிந்துரையைத் தொட்டால் பெட்டியிலேயே திருத்தம் ஆகும்.

  • தனிச் சாளரம்

    கருவிப்பட்டையில் செப்பத்தைத் திறந்து, அங்கேயே எழுதியோ ஒட்டியோ சரிபார்க்கலாம்.

பக்கத்திலேயே பரிந்துரைகள்
பக்கத்திலேயே பரிந்துரைகள்

நிறுவுவது எப்படி (Chrome, Edge, Brave)

  1. 1பதிவிறக்குங்கள்மேலே உள்ள பொத்தானில் seppam-extension.zip-ஐப் பதிவிறக்கி, அதைப் பிரித்தெடுங்கள் (Extract / Unzip). ‘seppam-extension’ என்ற கோப்புறை கிடைக்கும் — அதை நீக்காமல் வைத்திருங்கள்.
  2. 2நீட்டிப்புகள் பக்கம்Chrome-இல் முகவரிப் பட்டையில் chrome://extensions என்று தட்டுங்கள் (Edge-இல் edge://extensions).
  3. 3Developer modeவலது மேல் மூலையில் உள்ள ‘Developer mode’ என்பதை இயக்குங்கள் (Edge-இல் இடப்பக்கம்).
  4. 4Load unpacked‘Load unpacked’ என்பதை அழுத்தி, பிரித்தெடுத்த கோப்புறையைத் தேர்வு செய்யுங்கள். செப்பம் சுடர் கருவிப்பட்டையில் வரும் (புதிர்த் துண்டுச் சின்னத்தில் ‘pin’ செய்யலாம்).

புதிய பதிப்பு வந்தால், புதிய zip-ஐப் பதிவிறக்கி அதே கோப்புறையில் மாற்றி வைத்து, நீட்டிப்புகள் பக்கத்தில் ↻ அழுத்துங்கள்.

தனியுரிமை

  • நீங்கள் கேட்கும்போது மட்டுமே (வலது சொடுக்கு அல்லது பொத்தான்) நீட்டிப்பு பக்கத்தைப் பார்க்கிறது; அப்போது தேர்ந்தெடுத்த உரையோ எழுதும் பெட்டியின் உரையோ மட்டுமே சரிபார்க்க seppam.oliyonresearch.com-க்குச் செல்கிறது.
  • அந்த உரை சேமிக்கப்படுவதில்லை; பதிவுகளில் எழுதப்படுவதில்லை. குக்கீ எதுவும் அனுப்பப்படுவதில்லை.
  • பின்தொடர்தல் இல்லை, விளம்பரம் இல்லை, பகுப்பாய்வுக் கருவிகள் இல்லை. உங்கள் உலாவியில் மொழித் தேர்வு மட்டுமே நினைவில் வைக்கப்படுகிறது.
  • கேட்கும் அனுமதிகள்: வலது சொடுக்குப் பட்டி, நீங்கள் அழுத்தும் தாவலில் மட்டும் இயங்குதல் (activeTab, scripting), மொழித் தேர்வைச் சேமித்தல் (storage), செப்பம் தளத்துடன் பேசுதல்.