உதவி

செப்பத்தைப் பயன்படுத்துவது எப்படி

எழுதுங்கள் அல்லது ஒட்டுங்கள்; நீங்கள் நிறுத்தியதும் செப்பம் தானாகச் சரிபார்க்கும். கோடிட்ட சொல்லைத் தொட்டால் காரணமும் சரியான வடிவமும் தெரியும்; ஒரு தொடுதலில் திருத்தலாம்.

  1. 1

    எழுதுங்கள்

    தமிழ் விசைப்பலகையிலோ, Thanglish-இலோ (ஆங்கில எழுத்துகளில் ஒலித்தபடி) தட்டச்சுச் செய்யுங்கள். வேறு இடத்தில் எழுதியதை ஒட்டவும் செய்யலாம்.

  2. 2

    பாருங்கள்

    ஐயமுள்ள சொற்களுக்குக் கீழே வண்ணக் கோடு வரும். ஒவ்வொரு வண்ணமும் ஒரு வகைப் பிழை.

  3. 3

    திருத்துங்கள்

    பரிந்துரையைத் தொட்டால் திருத்தம் ஆகும். சரியான சொல்லைச் செப்பம் தவறாகக் காட்டினால் ‘விட்டுவிடுங்கள்’, அல்லது ‘என் சொற்களில் சேருங்கள்’.

Thanglish தட்டச்சு

ஒவ்வொரு எழுத்தும் ஒரு விதிப்படி மாறும்; ஒரே சொல்லை வேறு விதமாகத் தட்டினாலும் (vanakkam, vaNakkam) செப்பம் தமிழ்ச் சொற்களின் பெரும் பட்டியலில் பார்த்துச் சரியான சொல்லை முதலில் காட்டும். மேலே வரும் பட்டியலில் வேறு சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம்; Esc அழுத்தினால் ஆங்கிலமாகவே இருக்கும்; Alt+T Thanglish-ஐ நிறுத்தும்.

உயிர்

தட்டுவதுவருவது
aஅ
aa · Aஆ
iஇ
ii · ee · Iஈ
uஉ
uu · oo · Uஊ
eஎ
ae · Eஏ
aiஐ
oஒ
oa · Oஓ
auஔ
qஃ

வல்லினம்

தட்டுவதுவருவது
k · g · cக
ch · sச
t · dட
th · dhத
p · bப
Rற

மெல்லினம்

தட்டுவதுவருவது
ngங
njஞ
Nண
n (சொல்லின் முதலில்) · nhந
mம
n (சொல்லின் இடையில்)ன

இடையினம்

தட்டுவதுவருவது
yய
rர
lல
v · wவ
zh · zழ
Lள

கிரந்தம்

தட்டுவதுவருவது
jஜ
shஷ
Sஸ
hஹ
kshக்ஷ
sriஸ்ரீ

உயிர்மெய்: மெய்யுடன் உயிரைச் சேர்த்துத் தட்டுங்கள் — ka கா அல்ல, க; kaa கா; ki கி; kii கீ; ku கு; kai கை. மெய் மட்டும் வேண்டுமெனில் உயிர் இல்லாமல் தட்டுங்கள்: k க்.

சொற்கள்

தட்டுவதுவருவது
vaNakkam · vanakkamவணக்கம்
thamizh · thamilதமிழ்
nanRi · nanriநன்றி
ammaaஅம்மா
pazhamபழம்
kaNNanகண்ணன்
vaazhthukkalவாழ்த்துக்கள்
koilகோயில்

கோப்பு, குரல், பொருள்

கோப்பைத் திறவுங்கள்
Word (.docx), PDF, உரைக் கோப்பு (.txt), அச்சிட்ட அல்லது கையால் எழுதிய தமிழ்ப் பக்கத்தின் படம் (JPG, PNG, WebP) — எதையும் திறக்கலாம்; எழுதும் பெட்டியின் மேல் இழுத்து விடவும் செய்யலாம். கோப்பு உங்கள் உலாவிக்குள்ளேயே படிக்கப்படுகிறது; அதிலுள்ள உரை மட்டுமே சரிபார்க்கச் செல்கிறது. Word 10 MB, PDF 20 MB (முதல் 60 பக்கங்கள்), படம் 10 MB வரை. நீண்ட உரை பகுதி பகுதியாகச் சரிபார்க்கப்படும் (1,50,000 எழுத்துகள் வரை).
பழைய தமிழ் எழுத்துருக்கள்
Bamini, TAM, TSCII போன்ற பழைய எழுத்துருக்களில் தட்டச்சான கோப்புகள் திரையில் தமிழாகத் தெரிந்தாலும் உள்ளே ஆங்கில எழுத்துகளே. அவற்றைச் செப்பம் சொல்லிவிடும்; பக்கத்தைப் படமாக (screenshot) எடுத்துத் தந்தால் படத்திலிருந்து படிக்கும்.
திருத்திய பின்
‘திருத்திய உரையை நகலெடுங்கள்’, அல்லது .txt / .docx ஆகப் பதிவிறக்குங்கள்.
பேசுங்கள் · கேளுங்கள்
உலாவி அனுமதித்தால், ஒலிவாங்கிப் பொத்தானை அழுத்தித் தமிழில் பேசலாம் — சொற்கள் எழுதும் பெட்டியில் வரும். குரல் தட்டச்சு உலாவியின் சொந்தப் பேச்சுச் சேவையைப் பயன்படுத்துகிறது (Chrome-இல் Google-உடையது); செப்பம் எதையும் பதிவு செய்வதில்லை. உங்கள் கருவியில் தமிழ்க் குரல் இருந்தால் 🔊 ‘கேளுங்கள்’ திருத்திய உரையை வாசித்துக் காட்டும்.
செயலியாக நிறுவுங்கள்
கைப்பேசியிலோ கணினியிலோ செப்பத்தை ஒரு செயலியாக முகப்புத் திரையில் வைக்கலாம்: அடிக்குறிப்பில் உள்ள ‘செயலியாக நிறுவுங்கள்’ பொத்தானை அழுத்துங்கள். iPhone-இல் Safari-இன் பகிர் (Share) பொத்தான் → ‘Add to Home Screen’. இணைப்பு இல்லாதபோதும் முன்பு திறந்த பக்கங்கள் திறக்கும்; சரிபார்க்க இணைப்பு தேவை.
உலாவி நீட்டிப்பு
Chrome, Edge உலாவிகளுக்கான செப்பம் நீட்டிப்பைக் கொண்டு Gmail, WhatsApp Web போன்ற எந்தத் தளத்திலும் வலது சொடுக்கில் சரிபார்க்கலாம் — ‘உலாவி நீட்டிப்பு’ பக்கத்தைப் பாருங்கள் (/extension/).
நிகண்டில் பொருள்
பரிந்துரைக்கு அருகே அந்தச் சொல்லின் சுருக்கமான பொருள் ஒளியோன் ஆய்வகத்தின் நிகண்டிலிருந்து வரும்; பிழையில்லாத சொல்லைத் தொட்டாலும் பொருள் காட்டும். அதற்கு அந்த ஒரு சொல் மட்டுமே நிகண்டுக்குச் செல்கிறது.

வண்ணங்கள் எதைச் சொல்கின்றன

  • எழுத்துப் பிழைல/ள/ழ, ன/ண/ந, ர/ற குழப்பம், குறில்–நெடில், விடுபட்ட இரட்டிப்பு; சரியான சொல்லே தவறான இடத்தில் வந்தாலும் (வங்கி தருகிறேன் → வாங்கித் தருகிறேன், வாழை பலம் → வாழைப்பழம்).தமில் → தமிழ்
  • சந்தி (ஒற்று)வல்லினம் மிக வேண்டிய இடத்தில் விடுபட்ட ஒற்று, மிகக் கூடாத இடத்தில் வந்த ஒற்று; பிரித்து எழுதிய கூட்டுச்சொல் (வாழை பழம் → வாழைப்பழம்).கடைக்கு போனேன் → கடைக்குப் போனேன்
  • இலக்கணம்எழுவாயும் வினைமுற்றும் பொருந்தாமை; காலச் சொல்லுக்குப் பொருந்தாத வினைக்காலம் (நேற்று வருவேன் → நேற்று வந்தேன்); உயிருக்கு முன் ‘ஒரு’ என்பதற்குப் பதில் ‘ஓர்’.அவர் வந்தான் → அவர் வந்தார்
  • பேச்சு வழக்கு‘எழுத்து வழக்கு’ இயக்கத்தில் இருக்கும்போது மட்டும்: பேச்சு வடிவங்களுக்கு எழுத்து வடிவம்.தெரியல → தெரியவில்லை
  • மரியாதை வடிவம்‘மரியாதை வடிவம்’ இயக்கத்தில் இருக்கும்போது மட்டும்: ஏவல் வினைகளுக்கு மரியாதை வடிவம்.சொல் → சொல்லுங்கள்

செப்பத்தால் முடியாதவை

  • செப்பம் சொற்பட்டியலும் இலக்கண விதிகளும் கொண்டு செயல்படுகிறது; பொருளைப் புரிந்துகொள்வதில்லை. சரியான சொல் தவறான இடத்தில் வந்தால், அருகிலுள்ள சொற்களைக் கொண்டு செப்பம் கண்டுபிடிக்க முயல்கிறது (வங்கி தருகிறேன் → வாங்கித் தருகிறேன்). ஆனால் எங்கள் சோதனைகளில் இத்தகைய பிழைகளில் ஏறத்தாழ மூன்றில் ஒன்றையே பிடித்தது; தவறாகச் சுட்டாமல் இருப்பதையே முதன்மையாகக் கொண்டுள்ளோம்.
  • பெயர்கள், புதிய சொற்கள், அரிய சொற்கள், வட்டார வழக்குகள் சில நேரம் பிழையாகக் காட்டப்படலாம். அவற்றை ‘என் சொற்களில்’ சேருங்கள்; எல்லோருக்கும் பயன்படும் சொல் என்றால் ‘இது தவறான திருத்தமா?’ என்று அனுப்புங்கள்.
  • எல்லாச் சந்திகளையும் அல்ல, அடிக்கடி வரும் விதிகளை மட்டுமே பார்க்கிறது; ஐயம் உள்ள இடங்களில் அமைதியாக இருக்கும். அதனால் ‘பிழை இல்லை’ என்றால் ‘பிழையே இருக்காது’ என்று பொருளல்ல.
  • செய்யுள், இலக்கிய நடை, பழந்தமிழ் உரைகளுக்காக அமைக்கப்படவில்லை; இன்றைய உரைநடைக்கானது.

நீங்கள் எழுதுவது

சரிபார்க்க அனுப்பும் உரை அந்த நொடியில் மட்டுமே வாசிக்கப்படுகிறது; சேமிக்கப்படுவதில்லை, பதிவுகளில் எழுதப்படுவதில்லை, எதையும் பயிற்றுவிக்கப் பயன்படுவதில்லை. உங்கள் வரைவு உங்கள் உலாவியில் மட்டுமே இருக்கும். நீங்கள் திறக்கும் கோப்புகளும் படங்களும் உங்கள் உலாவிக்குள்ளேயே படிக்கப்படுகின்றன; எங்கும் பதிவேற்றப்படுவதில்லை. குரல் தட்டச்சு உலாவியின் சொந்தப் பேச்சுச் சேவையைப் பயன்படுத்துகிறது (Chrome-இல் Google-உடையது); செப்பம் எதையும் பதிவு செய்வதில்லை. தனியுரிமை அறிவிப்பு

சொற்கள் எங்கிருந்து

செப்பத்தின் சொற்பட்டியலில் சுமார் எட்டரை லட்சம் தமிழ்ச் சொல் வடிவங்கள் உள்ளன; அருகருகே வரும் சொற்களை ஒப்பிட 7.5 கோடி சொற்கள் கொண்ட தமிழ் உரைகளின் எண்ணிக்கைகளைப் பயன்படுத்துகிறது. இவை அனைத்தும் இந்தத் திறந்த தரவுகளிலிருந்து பெறப்பட்டவை; அவற்றை உருவாக்கியவர்களுக்கு நன்றி.

Thanglish விதிகள் ஒளியோன் ஆய்வகத்தின் ‘சுழி’ கருவியுடையவையே. ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்ட சொற்களும் பட்டியலில் சேர்கின்றன.

அடிக்கடி கேட்கப்படுபவை

உண்மையிலேயே இலவசமா?

ஆம். செப்பம் ஒளியோன் ஆய்வகத்தின் பொதுநலக் கருவி: கட்டணம் இல்லை, விளம்பரம் இல்லை, கணக்கும் தேவையில்லை.

கணக்கு எதற்கு?

உங்களுக்கே உரிய சொற்களை (பெயர்கள், ஊர்கள், துறைச் சொற்கள்) ‘என் சொற்கள்’ பட்டியலில் வைத்திருக்க. மின்னஞ்சல் குறியீடு அல்லது Google மூலம் உள்நுழையலாம்.

கைப்பேசியில் வேலை செய்யுமா?

ஆம். எந்த உலாவியிலும், எந்தத் தமிழ் விசைப்பலகையுடனும் வேலை செய்யும்.

தவறான திருத்தத்தைக் கண்டால்?

அந்தப் பரிந்துரையிலேயே ‘இது தவறான திருத்தமா?’ என்பதைத் தொடுங்கள். எங்கள் ஆய்வாளர்கள் பார்த்து, சரி என்றால் எல்லோருக்குமான பட்டியலில் சேர்ப்பார்கள்.

வேறு ஏதேனும் கேள்வி, கருத்து இருந்தால் எழுதுங்கள்: connect@oliyon.in