செப்பம் · ஒளியோன் ஆய்வகம்
தனியுரிமை அறிவிப்பு
நடைமுறைக்கு வந்த நாள்: 24 அக்டோபர் 2026
செப்பம் (seppam.oliyonresearch.com) ஒளியோன் ஆய்வகம் (Oliyon Research, சென்னை) வழங்கும் இலவசத் தமிழ்ச் சரிபார்ப்புக் கருவி. இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023-இன்படி உங்கள் தரவுக்கு நாங்களே பொறுப்பாளர் (Data Fiduciary). எதைச் சேகரிக்கிறோம், ஏன், எவ்வளவு காலம் என்பதை இங்கே எளிமையாகச் சொல்கிறோம்.
நீங்கள் சரிபார்க்கும் உரை
சரிபார்க்க அனுப்பும் உரை அந்த நொடியில் மட்டுமே எங்கள் சர்வரில் வாசிக்கப்படுகிறது. அதைச் சேமிப்பதில்லை, பதிவுகளில் எழுதுவதில்லை, எந்த மாதிரியையும் பயிற்றுவிக்கப் பயன்படுத்துவதில்லை, யாருக்கும் தருவதில்லை. நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வரைவு உங்கள் உலாவியில் மட்டுமே (local storage) இருக்கும்; ‘அழியுங்கள்’ பொத்தான் அதை நீக்கும். நீங்கள் திறக்கும் கோப்புகளும் (Word, PDF, உரை) படங்களும் உங்கள் உலாவிக்குள்ளேயே படிக்கப்படுகின்றன — கோப்பு எங்கும் பதிவேற்றப்படுவதில்லை; அதிலிருந்து எடுத்த உரை மட்டுமே மேலே சொன்னபடி சரிபார்க்கப்படுகிறது.
குரல் தட்டச்சு (‘பேசுங்கள்’) உங்கள் உலாவியின் சொந்தப் பேச்சு அறிதல் சேவையைப் பயன்படுத்துகிறது — Chrome-இல் அது Google-இன் சேவை, அதற்கு அந்த உலாவி நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையே பொருந்தும். செப்பம் உங்கள் குரலைப் பெறுவதோ பதிவு செய்வதோ இல்லை. ‘கேளுங்கள்’ உங்கள் கருவியில் உள்ள தமிழ்க் குரலைக் கொண்டு வாசிக்கிறது. சொல்லின் பொருளைக் காட்ட, அந்த ஒரு சொல் மட்டும் (உங்களைப் பற்றிய எதுவும் இல்லாமல்) ஒளியோன் ஆய்வகத்தின் நிகண்டுக்கு அனுப்பப்படுகிறது.
கணக்கு வைத்தால் நாங்கள் வைத்திருப்பவை
- மின்னஞ்சல் முகவரி, நீங்கள் தரும் பெயர், மொழித் தேர்வு, Google மூலம் உள்நுழைந்தால் Google கணக்கின் அடையாள எண்.
- உங்கள் ஒப்புதல் பதிவு — எதை, எப்போது, எந்தப் பதிப்பை ஏற்றீர்கள்.
- ‘என் சொற்கள்’ பட்டியலில் நீங்கள் சேர்க்கும் சொற்கள்.
- நீங்கள் அனுப்பும் பரிந்துரைகள்: சொல், மாற்றுச் சொல், குறிப்பு.
- கணக்குத் தொடங்கிய நாள், கடைசியாக உள்நுழைந்த நேரம், நீங்கள் எந்தத் தளத்திலிருந்து வந்தீர்கள் (தளப் பெயர் மட்டும்).
எல்லோரைப் பற்றியும் கணக்கிடுபவை
எந்தப் பக்கம் எத்தனை முறை பார்க்கப்பட்டது, எந்தத் தளத்திலிருந்து வருகை வந்தது (தளப் பெயர் மட்டும்), ஒரு நாளில் எத்தனை சரிபார்ப்புகள் நடந்தன — இந்த மொத்த எண்ணிக்கைகள் மட்டுமே. ஆளைப் பின்தொடரும் குக்கீகள், விளம்பரங்கள், விளம்பர நிறுவனங்களின் கருவிகள் எதுவும் இல்லை. உள்நுழைந்திருக்க மட்டுமே குக்கீகள் பயன்படுகின்றன (கீழே காண்க).
ஒளியோன் ஆய்வகக் கருவிகளுக்குப் பொதுவான உள்நுழைவு
oliyonresearch.com-இல் உள்ள ஒளியோன் ஆய்வகக் கருவிகள் (நிகண்டு, சுழி, செப்பம், தூது, அணு) பகிர்ந்துகொள்ளும் ஓர் உள்நுழைவுக் குக்கீ உங்கள் மின்னஞ்சலையும் பெயரையும் வைத்திருக்கிறது; அதனால் ஒரு கருவியில் உள்நுழைந்தால் மற்றக் கருவிகளும் உங்களை அறிந்துகொள்ளும். நீங்கள் வெளியேறும்போது அது அழிக்கப்படும். ஒவ்வொரு கருவியிலும் விதிமுறைகளையும் இந்த அறிவிப்பையும் தனித்தனியாக ஏற்கக் கேட்போம்.
பாதுகாப்புக்காக
தவறான பயன்பாட்டைத் தடுக்க, உங்கள் IP முகவரி அடிப்படையில் குறுகிய நேர எண்ணிக்கைகள் வைக்கப்படுகின்றன; அவை இரண்டு மணி நேரத்துக்குள் தானாக அழியும். தொழில்நுட்பப் பிழைப் பதிவுகள் 14 நாள்கள் வரை இருக்கும்; அவற்றில் நீங்கள் சரிபார்த்த உரை இருக்காது.
ஏன் பயன்படுத்துகிறோம்
- சரிபார்ப்புக் கருவியை இயக்க, உங்களை உள்நுழையச் செய்ய.
- உங்கள் சொல் பட்டியலை உங்களுக்காக நினைவில் வைக்க.
- நீங்கள் பரிந்துரைத்த சொற்களைக் குழுவினர் சரிபார்த்து, எல்லோருக்குமான சொல் பட்டியலில் சேர்க்க.
- நீங்கள் தேர்ந்தெடுத்த மின்னஞ்சல்களை அனுப்ப; உள்நுழைவுக் குறியீடுகளை அனுப்ப.
- தளத்தைப் பாதுகாப்பாக வைக்க.
யார் பார்க்கலாம்
செப்பத்தின் சொந்தக் குழுவினர் (வெளியாட்கள் அல்ல) மட்டுமே பரிந்துரைகளைப் பார்த்துச் சரிபார்ப்பார்கள். உங்கள் தரவை யாருக்கும் விற்பதில்லை. எங்கள் சார்பாகச் சேவை தருபவர்கள்: Amazon Web Services (இணையச் சேவை, மின்னஞ்சல் — மும்பை, இந்தியா), Google (நீங்கள் Google மூலம் உள்நுழைய விரும்பினால் மட்டும்).
எங்கே, எவ்வளவு காலம்
- எல்லாத் தரவும் இந்தியாவில் (AWS மும்பை) இருக்கிறது.
- கணக்குத் தரவு: நீங்கள் கணக்கை நீக்கும் வரை.
- உள்நுழைவுக் குறியீடு: 10 நிமிடங்கள். உள்நுழைவு அமர்வு: 30 நாள்கள்.
- காப்புப் பிரதிகள் 35 நாள்கள் வரை; அதன் பின் நீக்கப்பட்ட தரவு எங்கும் இருக்காது.
- நீங்கள் அனுப்பிய பரிந்துரைகள், கணக்கை நீக்கிய பின்னும், உங்கள் பெயர் இல்லாமல் சொல் பட்டியலின் வரலாறாக இருக்கும்.
உங்கள் உரிமைகள்
- உங்கள் தரவைப் பார்க்கவும் பதிவிறக்கவும் — கணக்குப் பக்கத்தில் ‘என் தரவைப் பதிவிறக்குங்கள்’.
- திருத்த — கணக்குப் பக்கத்தில் பெயர், மொழி, மின்னஞ்சல் தேர்வுகள்.
- ஒப்புதலைத் திரும்பப் பெறவும் அழிக்கவும் — ‘என் கணக்கை நீக்குங்கள்’.
- உங்கள் சார்பாக உரிமைகளைப் பயன்படுத்த ஒருவரைப் பரிந்துரைக்க.
- புகார் அளிக்க — connect@oliyon.in (குறைதீர்ப்புத் தொடர்பு); 30 நாள்களுக்குள் பதில் அளிப்போம். திருப்தி இல்லையெனில் இந்தியத் தரவுப் பாதுகாப்பு வாரியத்தை அணுகலாம்.
குழந்தைகள்
18 வயதுக்குக் குறைந்தவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தொடங்கும் கணக்கின் மூலம், அவர்களுடன் சேர்ந்து பயன்படுத்தலாம். கணக்கு இல்லாமல் சரிபார்ப்பதற்கு எந்தத் தனிப்பட்ட தரவும் தேவையில்லை.
மாற்றங்கள்
இந்த அறிவிப்பை மாற்றினால், பதிப்பு எண்ணையும் தேதியையும் மாற்றி, கணக்கு உள்ளவர்களிடம் மீண்டும் ஒப்புதல் கேட்போம்.
